திடீரென வீங்கிய அழகிய பெண்ணின் வயிற்றில் தர்பூசணி அளவில் இருந்த பெரிய கட்டி! சிகிச்சையின் போது வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report
123Shares

பிரித்தானியாவில் பெண் ஒருவருக்கு சில மாதங்களாக திடீரென வயிறு வீங்க தொடங்கியுள்ளது.

இதனை பார்த்த குறித்த பெண்ணின் கணவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தீவிர பரிசோதனையின் பின்னர் நினைத்து பார்க்க முடியாத அளவு மிக பெரிய கட்டி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த கட்டியானது 20 செண்டிமீட்டர் அளவில் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், சிகிச்சையின் பின்னர் அது தர்பூசணி அளவில் பெரிதாக 40 செண்டி மீட்டர் இருந்துள்ளது.

இதேவேளை, கட்டியை வயிற்றில் இருந்து அகற்றிய பின்னர் பிறகு மிகவும் இலகுவாக உணர்வதாகவும், முன்னர் கர்ப்பிணி போல காட்சியளித்தேன், எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அது புற்றுநோய் கட்டி கிடையாது என கூறியாதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பெண்ணின் வயிற்றில் அதிகளவு தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில் சில வாரங்களில் அவர் முழுவதுமாக குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவமனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

loading...