என்னடா இதெல்லாமா கொரியர்ல அனுப்புறது? அட கடவுளே.. அப்படி என்ன இருந்தது தெரியுமா

Report
187Shares

தைவானில் நபர் ஒருவர் தான் வைத்துகொள்ள விரும்பாத பூனை ஒன்றை விரைவுத் தபாலில் அனுப்பி சம்பவத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அந்த நபர் அனுப்பி வைத்தார்.

யாங் என்ற குடும்ப பெயருடைய 33 வயதான அவருக்கு, தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 60 ஆயிரம் நியூ தைவான் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக மேலும் 30 ஆயிரம் நியூ தைவான் டாலர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு காணொளியை வைத்து இந்த பூனையை அனுப்பியவரை நியூ தைவான் நகர விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்டது.

7728 total views