பசியில் மண்ணை சாப்பிட்ட புலி.. அதிர்ச்சி காணொளி

Report
135Shares

சீனாவில் விலங்கியல் பூங்காவில் பசி தாளாமல் வெள்ளைப் புலி ஒன்று மண்ணைச் சாப்பிட்டக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விலங்கியல் பூங்கா ஒன்றில் வெள்ளை வங்கப்புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட புலி ஒன்று தரையை நுகர்ந்து பார்த்த பின் மணலை சுரண்டி எடுத்துச் சாப்பிட்டது.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

இதனைக் கண்ட பார்வையாளர்கள் அதனை காணொளியாக எடுத்து வெள்ளைப் புலி பசியின் காரணமாக மணலைச் சாப்பிடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பினர்.

ஆனால் செரிமானக் கோளாறு காரணமாக புலி மண் சாப்பிட்டதாக பூங்கா நிர்வாகம் பதில் தெரிவித்துள்ளது.

4983 total views