மனித கழிவை அருகில் வைத்துக்கொண்டு உரையாற்றிய பில் கேட்ஸ்! எதற்காக தெரியுமா?

Report
638Shares

Microsoft நிறுவனத்தைத் உரிமையாளர் பில் கேட்ஸ் மனிதக் கழிவுக்கு அருகில் உரையாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெய்ச்சிங்கில் நேற்று உரையாற்றியபோது அவருக்கு அருகில் ஒரு பாட்டிலில் மனிதக் கழிவு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

கழிப்பறைகளில் பயன்படுத்தப்படக்கூடிய புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

பாட்டிலில் வைக்கப்பட்டதைப் போன்ற மனிதக் கழிவை அகற்றுவதற்குத் தண்ணீரும் தேவையில்லை. பாதாள சாக்கடை தேவையில்லை. அத்தகைய நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட புதிய கழிப்பறை தொட்டியை பில் கேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.

கழிப்பறைத் தொட்டியில் சேர்க்கப்படும் இரசாயனம் மனிதக் கழிவை உரமாக மாற்றிவிடும்.

அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் உலகில் பல்லாயிரம் பேர் உயிரிழந்து போகின்றனர். பல மில்லியன் பேர் இன்னமும் அதனால் தொற்று நோய்களுக்கு ஆளாகுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Bill & Melinda Gates Foundation கடந்த 7 ஆண்டுகளாக 200மில்லியன் டொலர் செலவில் கழிப்பறைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

அறநிறுவனத்தில் 20 புதிய அதிநவீன திட்டத்தில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

23944 total views