விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுனர்..

Report
99Shares

உக்ரைன் நாட்டில் நடைபெற்ற விபத்தில் கார் ஓட்டுநர் அதிசயமாக உயிர் தப்பிய காட்சிகளின் வீடியோ வெளியாகி உள்ளது.

லட்ஸ்க் (Lutsk) மாகாணத்தில் மைலஷி (Mylushi) என்ற இடத்தில் உள்ள சாலையில் பெரிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த வளைவில் இருந்து வெளிவந்த காரின் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியது.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியதுடன் கார் ஓட்டுநர் சில நிமிடங்கள் காரின் இடிபாடுகளுக்கு நடுவே அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். இந்த வீடியோ அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

4118 total views