12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த 5 சிறுவர்கள்! என்ன காரணம்...

Report
279Shares

கோவில் நிகழ்ச்சியில் பலூனை தொட்டதற்காக 12 வயது சிறுவன் ஒருவனை 5 சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கி கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆக்ரா நகரின் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் ஜென்மாஷ்டமி திருவிழாவின் போது கோவிலுக்குள் அலங்காரத்திற்கு பலூன் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அந்த பலூனை 12 வயது சிறுவன் தொட்டுப் பார்த்துள்ளான். குறித்த சிறுவன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அங்கிருந்த 5 சிறுவர்கள் அந்த சிறுவனை கொலைவெறியுடன் அடித்து விரட்டியதை சுராஜ் என்ற சிறுவன் பார்த்தமையைத் தொடர்ந்து இந்த தகவல் தாக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

அதன்பின்னர் தாக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொலிசாரிடம் சாட்சியம் அளித்த சுராஜ்,

இருவர் அவனுடைய கையையும் இருவர் காலையும் பிடித்துக்கொண்டனர் அதன் பின் ஒருவன் அவனது வயிற்றில் தாக்கியதாக கூறியுள்ளான்.

இதனிடையே தாக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு வந்ததும் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளான்.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12655 total views