90 ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு

Report
197Shares

பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டதாகக் நம்பப்பட்ட மரக்கங்காரு, தற்போது இந்தோனேசியாவில் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த மைக்கேல் சுமித் என்ற புகைப்பட கலைஞர், இந்தோனேசியாவின் பப்புவா என்ற வனப்பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தபோது குறிப்பிட்ட மரத்தில் சிறு சிறு கீறல்கள் இருப்பத்தை அவர் அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்தமரத்தின் உச்சியில் சென்று அவதானித்த போது, விசித்திரமான உயிரினம் ஒன்று இருப்பதை கண்டு, அதனை படம் பிடித்தார்.

அதன் பின்னரே இந்த உயிரினம் மரக்கங்காரு என்பது தெரியவந்தது. 90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட புள்ளி மரக்கங்காரு இன்னும் இந்தோனோஷியா தீவில் வசிப்பது இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த கங்காருவை கண்காணித்து, அதன் பெருக்கத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6197 total views