தீயில் கருகி உயிரிழந்த கர்ப்பிணி பெண்.. என்ன காரணம் தெரியுமா?

Report
127Shares

பெல்லன்வில பிரதேசத்தில் இரண்டு மாடி வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரழந்த சம்பவம் பரிதாப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ காரணமாக வீட்டில் இருந்த கணவன், மனைவி, 5 வயதான ஆண் பிள்ளை ஆகியோர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.

பெல்லன்வில சோமரத்ன மாவட்டத்தில் வசித்து வந்த 37 வயதான விதர்ஷி டயஸ், ஹொரணை அரச மருத்துவமனையில் மருத்துவராக சேவையாற்றி வந்த இந்த பெண் சேவையில் இருந்து விலகியுள்ளார். உயிரிழந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவன் மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த தீப்பரவலுக்கான காரணம், அவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக்கசிவு என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

4622 total views