விமானத்தில் அழுத குழந்தை... ஊழியர்கள் செய்த மனசாட்சியற்ற செயல்

Report
154Shares

குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இந்திய குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட தொடங்கியதும் 3 வயது குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.

பெற்றோர் குழந்தையின் அழுகையை சமாளிக்க முயன்றுள்ளனர். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. விமான ஊழியர்கள் குழந்தை அழுகையை நிறுத்த குழந்தையை மிரட்டியுள்ளனர்.

இதனால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அங்கு குழந்தையும் அதன் பெற்றோரும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இதுபற்றி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

6350 total views