15 ஆண்டுகளாக பெண்ணை குகையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி! திடுக்கிடும் புகார்

Report
857Shares

இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் பாலியல் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். அப்போது அந்த மந்திரவாதி சிறுமிக்கு பூஜை செய்ய வேண்டியுள்ளதால் அவரை தன்னிடம் விட்டுவிட்டு பின்னர் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி சிறுமியின் பெற்றோரும் அவரை மந்திரவாதியிடமே விட்டு சென்றுள்ளனர். பின்னர் வந்து கேட்டபோது சிறுமி தலைநகர் ஜகார்த்தாவுக்கு வேலை தேடி சென்றுள்ளார் என கூறியுள்ளார்.

மந்திரவாதி கூறியதை கேட்டு அப்படியே சென்றுவிட்டனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குகையில் இருந்து அந்த சிறுமி 28 வயது பெண்ணாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் கூறுகையில் தன்னை அந்த மந்திரவாதி அடைத்தவைத்து அம்ரின் என்ற இளைஞர் முன் ஜென்மத்தில் என் பாய் பிரண்ட்டாக இருந்ததாக கூறு ஒரு புகைப்படத்தை காண்பித்தான்.

பின்னர் அந்த இளைஞரின் ஆவி தன்னுள் புகுந்திருப்பதாகவும் அவர் சிறுமியுடன் செக்ஸ் உறவு வைக்க விரும்புவதாகவும் கூறி கடந்த 15 ஆண்டுகளாக அவரை அடிமையாக வைத்திருந்தாக அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியை கருகலைப்பு மாத்திரைகள் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

25717 total views