விஷ ஊசி போட்டு 20 நோயாளிகளை கொலை செய்த கொடூர செவிலியர்.. அதிர்ச்சியூட்டும் காரணம்?

Report
100Shares

ஜப்பானில் 20 நோயாளிகளை விஷ ஊசி போட்டுக் கொன்ற சைக்கோ செவிலியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அய்யூமி குபோகி என்ற பெண் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிகள் அவ்வப்போது மர்மமான முறையில் இறந்து போவது வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் அதிகம் தொல்லை கொடுக்கும் நோயாளிகளை, அய்யூமி மருந்தில் விஷம் கலந்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இவர் 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் வி‌ஷத்தை கலந்து செலுத்தி கொன்றுள்ளார்.

இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து பொலிசார் அந்த சைக்கோ செவிலியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயிரை காக்கும் உன்னத தொழில் செய்யும் செவிலியரே இப்படி கொலை செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3931 total views