காதல் திருமணம் செய்த மகனின் கண்ணை தோண்டிய தந்தை! எதற்கு தெரியுமா......

Report
458Shares

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி.

இவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பாகியின் தந்தை மற்றும் சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் ஸ்பூன் மூலம் அவரது இரு கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாகியின் தந்தை மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20177 total views