பாட்டிலில் பச்சிளம் குழந்தைகளின் பரிதாபநிலை... அதிச்சியளிக்கும் புகைப்படம்

Report
470Shares

வீடு புதுப்பிக்கும் பணியின் போது, தரைக்கு அடியில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு வீட்டை புதுபிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது தரைக்கு அடியில், 4 கண்ணாடி பாட்டில்கள் இருந்துள்ளது.

அந்த பாட்டிலை எடுத்து பார்த்த போது, பிறந்தவுடன் தொப்புள் கொடியுடன் கூடிய குழந்தையை பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் கெடாமல் இருக்க அதற்கான ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டினை கடந்த மூன்று வருடமாக யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். முன்னதாக இந்த வீட்டை ஒரு மருத்துவரிடமிருந்து ஒரு நபர் வாங்கி உள்ளார்.

மூன்று வருடங்களுக்கு பின்பு, இதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளத்தால், அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளரான மருத்துவரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

15475 total views