16.8 கிலோ எடையுள்ள இளம்பெண்!! தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை...

Report
345Shares

ஜப்பானின் கியோட்டோ (Kyoto) என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்பட்டங்களை இணையத்தில் பகிர்ந்தார். எலும்பும் தோலுமாக இருந்த அப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது. இதனை பற்றி விசாரித்தபோது அவரது சொந்த தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளாகி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது அறியவந்தது.

எப்போதெல்லாம், அந்த இளம் பெண் சாப்பிட முற்படுகிறாரோ, அல்லது சாப்பிடுவதை அந்த தாத்தா காண்கிறாரோ, அப்போதெல்லாம் உடல் ரீதியாக வன்கொடுமை செய்து சாப்பிட விடாமல் சித்திரவதை செய்துள்ளார். எனவே அப்பெண் வெறும் 16.8 கிலோ மட்டுமே இருந்துள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது அவரது இடுப்பு பகுதி எலும்புகள் கூட தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிற்கு உடலில் சதையோ, தசை வலிமையோ இன்றி காணப்பட்டுள்ளார் இந்த இளம்பெண்.

ஆனால் இந்த சம்பவம் பத்து வருடங்களுக்கு முன்னர் அப்பெண் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது என்றும் அறியப்படுகின்றன.

கியோட்டோ என்ற பகுதியில் வசித்த வந்த இந்த பெண் எடுத்த செல்ஃபீ படங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படங்கள் என்று அறியப்படுகின்றன.

பத்து வருடங்களாக இந்த இளம்பெண் வேறு வழியின்றி தனது தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர வேண்டிய நிலையில் இருந்துள்ளார். அந்த பத்து வருடமும் பசியால் மிகவும் வாடியுள்ளார். உண்பதற்கு சாப்பாடு போடாமல் கொடுமை செய்துள்ளார்.

மேலும் அந்த பெண் கூறுகையில்,

எப்படியாவது அவர் இல்லாத சமயத்தில் அல்லது திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார், என் வாயில் இருக்கும் உணவை அவரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார்.

சில சமயம் தன்னை உடல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்பவங்களும் அறங்கேறும். ஒரு கட்டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்ளப்பட்டேன் என்று சமூக தளங்களில் பகிர்ந்த படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த பெண் முற்றிலும் குணமடைந்து ஆரோக்கியமான உடல் எடையில் இருக்கிறார். சட்ட ரீதியாக தனது தாத்தாவோ அல்லது உறவினர்களோ பாதிப்படையக் கூடாது என்று கருதி அவர்கள் பற்றிய தகவல்களை இப்பெண் வெளியிடவில்லை.

13134 total views