பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. நெகிழ்ச்சியடைய வைக்கும் தம்பதி

Report
308Shares

பணம் தான் வாழ்க்கை என்று வாழும் பல பெண்கள் மத்தியில் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு பெண் பிச்சைக்காரரை காதிலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் விக் கோகுலா என்ற பிச்சைக்கார இளைஞர், ரோட்டோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற எமி ஆப்ரஹாம்சன் என்ற பெண், விக்கை சந்தித்து பேசியுள்ளார்.விக்கின் பேச்சில் மயங்கிய எமி, அவர் மீது காதல் மோகம் கொண்டுள்ளார்.

விக்கின் பிரவுன் நிற கண்களை பார்த்து மயங்கிய எமி, விக்கிடம் தனது மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சில நாட்களுக்கு பிறகு எமிக்கு போன் செய்த விக், எமியை நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விக் தற்பொழுது எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருக்கிறார். விக் எமி தம்பதியினருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் எமி அவரது காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.

14111 total views