பூட்டிய வீட்டிலிருந்து 2 நாட்களாக கதறி அழுத குழந்தை... பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report
843Shares

தாத்தா மற்றும் பாட்டி இறந்தது கூடத் தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து வீட்டின் அறையில் அழுதுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் தனது 3 வயது பேரனுடன் வசித்து வந்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோர் வெளியூரில் வேலை செய்து வந்ததால் இவர்களிடம் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வயதான தம்பதி சிறிய உணவுக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டின் கதவும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழ உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கதவை உடைத்து நுழைந்த பொலிசார் 3 வயது குழந்தை அழுது கொண்டிருந்ததையும், அருகில் அவரது பாட்டி ஹாலில் இருக்கும் போனை கையில் வைத்தபடியும், அருகில் அவரது தாத்தாவும் இறந்ததை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், குழந்தை இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து அழுத படி இருந்துள்ளதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையின் தாத்தாவிற்கு மூளையில் கட்டி இருந்துள்ளது. அது தொடர்பாக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று அவருக்கு ஏதேனும் ஆகியிருக்கலாம்.

இதனை உடனடியாக உறவினர்களுக்கு தெரிவிப்பதற்கு அவரின் மனைவி போனை எடுத்த போது, அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பதால், அவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இருப்பினும் இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

33258 total views