சுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா?.. நம்பமுடியாத பல உண்மைகள்

Report
229Shares

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மார்ச் மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறதே என்ற பேச்சு தான் அதிகமாக உள்ளது.

கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது.

மேலும் வாகனங்களின் புகை, அதிகப்படியாக மின் விளக்குகளால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பத்தை தணிக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் புங்கை மரம், இதன் தாவரவியல் பெயர் பொங்கிமியா பின்னாடா .

ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பொங்கேமியா என்பது தென்னாட்டுப் பெயரான புங்கம் என்பதிலிருந்து உருவானதாகும்.

இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து, இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும்.

"புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும்' என ஐங்குறுநூறு (117) சிறப்பித்து கூறுகிறது. இம்மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.

மல்லிகைப் பூப் போன்றிருக்கும் இதன் பூக்கள் மூலிகை மருந்தாகவும், விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புங்கம் எண்ணெய் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.

காற்றில் உள்ள மாசுக்களை (கார்பன்டை ஆக்ஸைடு) வடிக்கட்டி நல்ல காற்றினை (ஆக்சிஜன்) நமக்கு தரவல்லது.

அதேபோல், வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறனும் கொண்டதுடன் வெப்பத்தையும் தணிக்கும். சாலை ஓரங்களில் நிழலைத் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் செய்யவும்.

மருத்துவ பலன்கள்

  • புங்கன் இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி குடித்து வந்தால் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் குணமாகும்.
  • இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வந்தால் வீக்கம் குறைந்து, காயம் ஆறும்.
  • இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் மறையும்.
  • குழந்தைகளின் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், பேதி ஆகியவற்றுக்கு புங்க இலைச்சாறு கைகண்ட மருந்தாகும்.
  • புங்கன் பூவை வதக்கி சிறிது நெய், சிறிது பேரிச்சையுடன் அரைத்து காலை மாலை இருவேளை நெல்லி அளவு உண்ண நீரிழிவு நோய் குணமாகும்.
  • கக்குவான் இருமல், சுவாசக் கோளாறுகளுக்கு புங்கன் விதைச் சூரணம் அருமருந்தாகும்.

பொதுவாக பலன்கள்

தொழிற்சாலைக் கழிவான விஷ வாயு மீத்தைல் ஐசோ சயனைடை இது உறிஞ்சி கிரகித்துவிடும் சக்தியுள்ள மரம் எனவே தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நட்டு சுற்றுச்சூழல் பேணலாம்.

இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை,வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது.

அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளக்கலாம். எனவே புங்கன் மரத்தை வளர்த்து பயனடைவோம்!... இயற்கையோடு பயணிப்பதே பல நோய்களுக்கு அருமருந்து.

loading...