மறக்கப்பட்ட உண்மைகளால் மரணிக்கும் மனிதர்கள்... உயிரைப் பறிக்கும் நோய்க்கு நொடியில் தீர்வு!

Report
175Shares

சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் கூறிய எக்கோ சிஸ்டம்..

  • ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிற்றர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிற்றர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும்.
  • ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
  • துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
  • சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
  • பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.
  • ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின.
  • ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும். இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
  • அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது. முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும். நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
  • இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே.... இயற்கை மனிதனை வாழவைக்கும், செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையே...

6892 total views