மொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ....கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க!

Report
881Shares

மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறப்பதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு மொபைல் சார்ஜ் போடுவது நல்லது.

மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. அது இல்லை என்றால் அனைவருக்கும் ஒரு கை உடைந்தது போல் இருக்கும். போனின் தேவை அனைவருக்கும் அவசியமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் இல்லாதவர் யாரும் இல்லை, ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை சார்ஜ் போட வேண்டிய கவலை இல்லாமல் அனைவரது கையிலும் கர்சிப் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பவர் பேங்க் இருக்கும்.

  • தரமான பிராண்ட்களை பயன்படுத்துவது மொபைலில் இருக்கும் பேட்டரிக்கு பாதுகாப்பு. அதேபோல் பவர் பேங்கில் சார்ஜ் போட்டிருக்கும் போது ஹெட்போன் பயன்படுத்த கூடாது.
  • மொபைல் கவரை கழட்டாமல் சார்ஜ் போட வேண்டாம். ஹீட்டாக இருக்கும் போன்யை கூலிங்காக வைக்கவும் அதற்கு கவரை கழற்றி சார்ஜ் போட்டால் மொபைல் ஹீட் ஆவதில் இருந்து தவிர்க்கலாம்.
  • தூங்கும் முன் கண்டிப்பாக மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்க வேண்டாம். அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய் மொபைலின் ஆயுள் குறைந்துவிடும்.
  • மேலும், 15 சதவீதம் இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன பிறகு சார்ஜ் போட வேண்டாம். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டு விட்டு எடுத்து விடலாம் என்று 20 அல்லது 30 சதவீத சார்ஜ் ஆனவுடனே எடுக்க வேண்டாம். குறைந்தது 80 சதவீதமாவது இருக்கும் போது சார்ஜ் எடுத்து விடுங்கள்.
  • டேடா கனஷ்சன், ஆப்கள் ஏதாவது ஓபனாக வைத்திருந்தால் அனைத்தையும் ஆஃப் செய்துவிட்டு சார்ஜ் போடவும். இல்லையென்றால் சார்ஜ் ஆவதற்கு தாமதமாகும், பேட்டரியும் வீணாகும் நீண்டநாளுக்கு வராது.
  • காசு கொடுத்து மொபைல் வாங்குவதை விட அதை பாதுகாத்து வைப்பதே அதைவிட முக்கியம்!

31983 total views