தொலைந்து போன ஸ்மார்ட்போனில் பெர்சனல் போட்டோஸ் இருக்கேனு பயமா? கவலை வேண்டாம் ஈசியா அழிச்சிடலாம்!

Report
102Shares

ஸ்மார்ட்போன் கூட ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்தான். நாலு பேரை கேட்டு, ரிவ்யு பார்த்து, பணம் சேர்த்து வாங்கிய ஒரே மாதத்தில் மொபைலை தொலைத்தவர்கள் நிறைய பேர். தகவல்குரு தளத்தில் மொபைலை தொலைத்து விட்டேன் எப்படி கண்டுபிடிப்பது என கேட்டவர்கள் நிறைய பேர்.

அதிலும், என் மொபைல் ல பெர்சனல் அப்ளிகேசன்ஸ் அதிகமாக வச்சிருந்தேன். அது எல்லாம் எப்டி அழிக்கிறதுனு தெரியலையே என புலம்புபவர்களும் இங்கு ஏராளம்.

அப்படிப்பட்டவர்களுக்ககத்தான் இந்த நீங்கள் தொலைத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

அடுத்து உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

தொடர்ந்து அங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase

3958 total views