சக்தி வாய்ந்த இந்த வெள்ளை பொருளை தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க போதும்! தீராத நோயும் அலண்டு ஓடும்

Report
738Shares

எள்ளு ஆசியாவில் உணவுப் பொருட்களின் மேல் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. உணவில் சேர்த்து வரும் எள்ளு விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

இந்த சிறிய விதையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இதனால் இது உலகிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த சிறிய எள்ளு விதைகளை லேசாக வறுத்து உணவில் சேர்த்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் சுவையாக இருக்கும். இதனை பச்சையாக அப்படியே கூட சாப்பிடலாம்.

இப்போது எள்ளு விதையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

  • எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும்.
  • எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும்.
  • எள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும்.
  • குறிப்பாக கருப்பு நிற எள்ளு விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • எள்ளு விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
  • எனவே ஒருவர் எள்ளு விதைகளை அன்றாடம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும்.
  • எள்ளு விதைகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அளித்து, பாதிக்கப்பட்ட சரும திசுக்களை புதுப்பிக்க உதவும்.
  • எனவே உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், எள்ளு விதைகளை அல்லது எள்ளு எண்ணெய்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் சரும புற்றுநோய் வருவது குறையும்.
  • எள்ளு விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளான சீசேமோல், பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
  • எள்ளு விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
  • எள்ளு விதைகள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது.
  • மேலும் இதில் மன அமைதியை அதிகரிக்கும் வைட்டமின்களான தியாமின் மற்றும் ட்ரிப்டோபேன் போன்றவை செரடோனின் உற்பத்திக்கு உதவி, உடல் வலி, மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
  • எள்ளு விதைகள் சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், சருமத்தில் கருமை ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே இளமையை தக்க வைக்க நினைப்பவர்கள், தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.