இந்த ஒரே ஒரு கருப்பு பொருள் மட்டும் வீட்டுல இருந்தா போதும்! சர்க்கரை நோயிக்கு முடிவு கட்டிடலாம்? எப்படி தெரியுமா?

Report
409Shares

சர்க்கரை நோயால் இன்று ஆண்டுக்கு பல கோடி பேர் பாதிக்கப்பட்டும் , உயிரை பறிகொடுத்தும் வருகின்றனர்.

ஆனால், இந்த நோயை கட்டுப்படுத்தும் தன்மை நம் வீட்டில் உள்ள இந்த கருப்பு உணவு பொருளுக்கு உள்ளது என ஆய்வுகள் கண்டறிந்து உள்ளது.

இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் உண்டாகும் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் மேலும் பல தாதுக்கள் சர்க்கரை நோயிக்கு மருந்தாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதுவும் டைப் 2 வகை சர்க்கரை நோயிற்கு சிறந்த மருந்தாக இது செயல்படுமாம்.

எவ்வாறு?

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான அளவில் வைத்து கொள்ள கருஞ்சீரகம் உதவும். சாப்பிட கூடிய உணவில் சிறிதளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொண்டாலே இதன் பலன் அதிகரிக்கும். அத்துடன் இன்சுலின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும்.

கொலஸ்ட்ரால்

தற்போதைய நிலையில் ஒரு நோய் வந்து விட்டால் அதை பின் தொடர்ந்து மேலும் சில நோய்கள் வந்து விடுகின்றன. அதே போன்று சர்க்கரை நோய் வந்தால் அதன் காரணமாக இதய நோய்களும் வருவதுண்டு. அவ்வாறு இருக்க கருஞ்சீரகத்தை கொண்டு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இயலும். மேலும் டைப் 2 வகை சர்க்கரை நோயின் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

சிறந்தது எது?

நாம் வெறும் கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதை விட அதை எண்ணெய்யாக தயாரித்து பயன்படுத்தினால் சிறந்தது. இது சர்க்கரை வியாதி கொண்டோருக்கு அருமருந்தாக இருக்கும். அத்துடன் கொலஸ்ட்ராலின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளும்.

கருஞ்சீரகத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் சமமான அளவில் இருக்கும். கூடவே இதிலுள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி உடலின் வலிவை அதிகரிக்க பயன்படும். எனவே, சர்க்கரை நோயாளிகள் உங்களின் மருத்துவருடைய ஆலோசனையுடன் போதுமான அளவு இதனை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

loading...