கல்லீரல் கொழுப்பை எரிப்பதை நிறுத்தினால் உடல் பருத்து குண்டாகிடுமாம்! என்ன காரணம் தெரியுமா?

Report
405Shares

எல்லாரும் கொழுப்பை கரைக்க வேண்டும், தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே டயட் முறைகளைத் தான் பின்பற்றுகின்றனர்.

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் குளுக்கோஸ் ஆக மாற்றம் செய்யப்பட்டு உடலுக்கு ஆற்றலாக மாற்றப்படுகிறது.

ஆனால் நாம் எல்லா நேரமும் இந்த ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. இந்த மீதமுள்ள குளுக்கோஸை கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைக்கப்பட்டு, தேவைப்படும் போது இந்த கொழுப்பு எரிக்கப்பட்டு மீண்டும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இந்த கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது நம் கல்லீரலில் வாழும் மைட்டோகாண்ட்ரியா தான். இது ஒரு ஆற்றலின் இருப்பிடம் அல்லது சக்தி மையம் என்றே கூறலாம்.

இந்த செயல்கள் ஒழுங்காக நடந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவேளை உங்கள் கல்லீரல் கொழுப்பை எரிப்பதை நிறுத்தினால் என்னவாகும்? இது குறித்து முழுமையாக பாருங்கள்.

நமது கல்லீரல் சரியாக கொழுப்பை கரைக்காவிட்டால் உடல் பருத்து குண்டாக ஆரம்பித்து விடுவோம். உடல் பருமனுக்கு முக்கியமான காரணம் உங்கள் கல்லீரல் கொழுப்புச் செயல்பாட்டில் சரிவர இயங்காமல் இருப்பது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொழுப்பு எரியும் சக்தி பலவீனமடைய என்ன காரணம்

நீங்கள் அதிக ப்ருக்டோஸ் உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் கல்லீரலின் கொழுப்பு எரியும் சக்தி பலவீனமடைந்து கல்லீரல் மெதுவாக சேதமடையக்கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் 'செல் வளர்சிதை மாற்றம்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் படி, குளுக்கோஸ் உங்கள் கல்லீரலுக்கு நல்லது என்றாலும், ப்ருக்டோஸ் உங்கள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானது, மற்றும் இரண்டும் சர்க்கரையின் வெவ்வேறு வடிவங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உயர் ப்ருக்டோஸ் டயட் என்றால் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

உயர் ப்ருக்டோஸ் டயட் என்றால் என்ன?

ப்ருக்டோஸ் என்பது ஒரு வகை சர்க்கரை. இது பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை இனிப்பு வகைகளில் காணப்படுகிறது. ஆனால் இப்படி இயற்கையாக கிடைக்கும் ப்ருக்டோஸ் மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆனால் நவீன காலங்களில் செயற்கை ப்ருக்டோஸ் இனிப்புகள் ஏராளமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை ப்ருக்டோஸ் ஆரோக்கியத்திற்கும் கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உடல் பருமனை குறைக்கவும் நினைத்தால் இந்த உயர் ப்ருக்டோஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

loading...