இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்!

Report
799Shares

நீரிழிவு காரணமாக உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கக்கூடும். நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் இருந்தாலும், அது மட்டும் போதுமானதல்ல.

உங்கள் தினசரி உணவில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.

உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் உணவு பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

கேழ்வரகு

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம்.

அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களே பண்டைய தமிழர்கள் தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது.

இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.

கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) செரிமானத்தை குறைக்கின்றன.

இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது.

கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டச்சத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.

loading...