சீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம்! மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்

Report
990Shares

சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும்.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. தினமும் இப்படி செய்தால் வாழ்நாளில் மருத்துவர்களை நாட தேவை இல்லை.

மாதவிடாய் கால வலிக்கு

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம்.

அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

செரிமான பிரச்சனைகளுக்கு

செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இரும்புச்சத்து

உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். இரும்பு சத்து இரத்த உற்பத்திக்கும் உதவியாக இருக்கிறது. சீரக நீரை பருகுவதால் உங்களது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது.

loading...