தைராய்டு- சரிசெய்வது எப்படி? தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்

Report
1159Shares

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைத்து வயதினரையும் தாக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது ”தைராய்டு”.

தைராய்டு மிகக்குறைவாக சுரப்பதை ஹைப்போதைராய்டிஸம் என்றும், அளவுக்கு அதிகமாக சுரந்தால் ஹைப்பர்தைராய்டிஸம் என்றும் அழைப்பார்கள்.

தைராய்டு சுரப்பி

உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு.

இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கின்றன.

அறிகுறிகள்

 • உடல் எடை குறைவது அல்லது திடீரென அதிகரிப்பது
 • உடல் சோர்வாக இருப்பது
 • கழுத்தில் வலி மற்றும் வீக்கம்
 • குரல் கரகரப்பாவது
 • மூச்சு விடுவதில் சிரமம்
 • குடல் இயக்கம் அதிகரித்தல்
 • நரம்பு தளர்ச்சி
 • ஒருவிதமான எரிச்சல், பதற்றம்
 • இதயத்துடிப்பில் மாறுபாடு
 • பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை
 • கருத்தரிக்க முடியாமல் போவது

சாப்பிட வேண்டிய உணவுகள்

தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய அயோடின் சத்து அவசியம், எனவே அயோடின் சத்துள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்கலாம், இதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு அயோடின் கிடைக்கிறது.

தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம், சமைக்கும் போது சாதாரண உப்பை விட அயோடின் கலந்த ப்பை பயன்படுத்தலாம்.

தினசரி ஒரு முட்டை சாப்பிடலாம், தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் சிவப்பரிசியை எடுத்துக் கொள்ளலாம்.

கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியில் அதிகஅளவு துத்தநாகச் சத்து உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் ஹைப்பர்தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தைராய்டு உள்ளவர்கள் பாஸ்ட்புட் ணவுகளை தவிர்ப்பது நலம், இதிலுள்ள கெட்ட கொழுப்புகள், தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதேபோன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும்.

சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டைக்கோஸ், காலிப்ளவர் மற்றும் பிராக்கோலி போன்ற காய்கறிகளையும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது.


You May Like This

loading...