தொண்டை வலியால் அவஸ்தையா? இந்த பானங்களை குடியுங்கள்

Report
151Shares

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும்.

அதிலும் பருவநிலையானது குளிர்காலமாக இருந்தால், சொல்லவே வேண்டாம். அனைத்து நோய்களும் நமது உடலில் புகுவதற்கு வரிசையாக நின்று, அதற்கான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும்.

அவ்வாறு உடலில் புகும் கிருமிகள், இருமலின் மூலம் தொண்டையில் சிறிது காலம் தங்கி, அங்கு புண்ணை ஏற்படுத்தி, பெரும் தொந்தரவைத் தரும்.

நாமும் தொண்டைப் புண்ணை சரிசெய்கிறேன் என்ற பெயரில், சாப்பிடக் கூடாத உணவுகளை உட்கொள்கின்றோம்.

தொட்டை வலியை உடனே போக்க இந்த பானங்களை அருந்துங்கள்.

சிக்கன் சூப்

இருமல் இருந்தால், மருத்துவர்களின் மருந்து என்னவென்றால், அது சூடான சூப் தான்.

ஏனெனில் அவை தொண்டையின் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும்.

மசாலா டீ

டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும்.

அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி

தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

6178 total views