கொடிய பூச்சுகளின் விஷத்தையும் நொடியில் இறங்க செய்யும் கொலுமிச்சை!

Report
120Shares

எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த கொலுமிச்சை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது.

இதனை ஆங்கிலத்தில் காஃபிர் என்று கூறுவார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

கொலுமிச்சை பற்றி இதுவரை நீங்கள் அறியாத ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

  • கொலுமிச்சை இலைகளை ஈறுகளில் தேய்ப்பது வாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வழக்கமான உணவு முறைகளால் வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்குகிறது.
  • கொலுமிச்சை எண்ணெயை பற்பசைகளில் பயன்படுத்துவது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கொலுமிச்சையில் உள்ள சிட்ரோனெல்லோல் மற்றும் லிமோனைன் கலவைகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்ய உதவுகிறது. பூச்சிக்கடிகளை உடனடியாக குணப்படுத்த கொலுமிச்சை உதவுகிறது.
  • செல்கள் சிதைவடைவதை தடுக்கிறது, இதன்மூலம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், முகப்பருக்கள் மற்றும் தடிப்புகளை தடுக்கிறது.
  • கொலுமிச்சையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இது இரைப்பை மற்றும் குடல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • சரும நிபுணர்களின் படி கொலுமிச்சை சாறை தலையில் தேய்ப்பது முடி உதிர்வை தடுக்கும் மேலும் கூந்தலின் நுனிகளை பலப்படுத்த உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் பொடுகை விரட்டவும் பயன்படுகிறது.

4544 total views