இந்த வீட்டு வைத்தியத்தை தெரியாமல் கூட முயற்சி செய்திடாதீங்க... ரொம்ப ஆபத்தாம்!

Report
206Shares

தற்போதுள்ள வாழ்க்கை முறை அதிகமாக மாற்றங்களையும், பல சிக்கல்களையும் கொண்டு வருகின்றன. மருத்துவ வசதிகள் இல்லாத காதலக்கட்டங்களில் முன்னோர்கள் பலவிதமான வீட்டு வைத்தியங்களை செய்து நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். மருத்துவத்திற்கு மட்டுமல்ல உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

நம் முன்னோர்கள் கையாண்டு வந்த சில வீட்டு வைத்தியங்கள் தற்போது எப்படிப்பட்ட பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

உடைந்த பற்கள்

உடைந்த பற்களை மருத்துவரை அணுகாமல் தானாகவே சரி செய்வதற்கு பலவிதமான ஒட்டுப்பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்தப்படும் பற்பசைகள் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் ஈறுகளில் மதுவை தடவுவது

மதுவை வைத்தியத்திற்கு அதிகமாக பயன்படுத்திய மக்கள் இதனை பல் துலக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் வலியை போக்க பயன்படுத்தியுள்ளனர். இது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு ஆபத்தும் ஆகும்.

தீக்காயங்களுக்கு வெண்ணெய்

உணவிற்கு மட்டும் பயன்படுத்தப்படும் வெண்ணெய் தீக்காயங்களுக்கு பயன்படுத்துவது தவறாகும். இது குளிர்ச்சியை மட்டுமே ஏற்படுத்தும் இதனால் தீக்காயம் சரியாகாது. இதனால் நோய்த்தொற்றுகளும் ஏற்படும்.

கண்கட்டியை ஊசியால் குத்துவது

கண்ணில் கீழ் இமையில் வரும் கண்கட்டியை ஊசியால் குத்துவது தவறாகும். இது சில தருணங்களில் கண்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

தலை பேன்

தலையில் ஏற்படும் பேன்களைப் போக்க உரங்கள், மண்ணென்ணெய், பெட்ரோல் இவற்றினை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தில் நுழைந்து ஆபத்தினை ஏற்படுத்துவது மட்டுமின்றி கண்களும் பாதிக்கப்படுமாம்.

முகப்பருவுக்கு பற்பசையை பயன்படுத்துவது

முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு பற்பசையை பயன்படுத்தியுள்ளனர். பற்பசையில் இருக்கும் பேக்கிங் சோடா பருவை உலர்த்துகின்றது. ஆனால் இதிலிருக்கும் ரசாயணங்கள் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவினை பலரும் உடம்பில் தேய்த்து குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இது ஒரு வதந்தியாகும். இதனால் தோலில் எந்தவொரு அழகு சம்பந்தமான மாற்றமும் ஏற்படாதாம்.

ஆமணக்கு எண்ணெய்

மலச்சிக்கலுக்கு முன்னோர்கள் பயன்படுத்திய ஆமணக்கு எண்ணை குடலை சேதப்படுத்துவதுடன், குடல் இயக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

நெஞ்செரிச்சலுக்கு பால் குடிப்பது

இது மிகவும் பொதுவான மோசமான வீட்டு வைத்தியமாகும். குளிர்ந்த பாலை குடிப்பது குளிர்ச்சியை மட்டுமே ஏற்படுத்தும். இதில் இருக்கும் கொழுப்பு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.

6245 total views