சக்கரை நோயாளி தினமும் தேன் சாப்பிடலாமா? இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
179Shares

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான்.

சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.

முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து தெரிந்து, தினமும் தேனை சாப்பிட்டு வாருங்கள்.

இரத்த அழுத்தம் குறையும்

ஒருவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக மனிதன் மற்றும் எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

இரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது இன்சுலின் அளவை சற்று அதிகரிக்கும். இன்சுலின் தூண்டப்பட்டால், அது முளையில் உள்ள ட்ரிப்டோஃபேனை வெளியிடச் செய்யும். ட்ரிப்டோஃபேன் பின்பு செரடோனின் என்னும் உடலை ரிலாக்ஸாக உணரச் செய்யும் மற்றும் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோனாக மாற்றப்படும். முக்கியமாக இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.

எடை குறைய

உதவும் தேன் கல்லீரலுக்கு எரிப்பொருள் போன்று செயல்படும் மற்றும் கல்லீரலில் க்ளூக்கோஸ் உற்பத்திக்கு உதவும். ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், உடல் கொழுப்புக்களை இரவு நேரத்தில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும். 1 கப் பச்சைத் தேனில் 64 கலாரிகள் உள்ளன மற்றும் இதை சாப்பிட்டல், இரவு நேரத்தில் பசி எடுக்காமலும் இருக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது சர்க்கரை நோயாளின் அபாயதைக் குறைக்குமாம். அதிலும் உங்களுக்கு ஏற்னவே சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும். ஏனெனில் தேன் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

5233 total views