நீரிழிவு நோயாளிகளே மாத்திரை, மருந்து இனி வேண்டாம்... இந்த இன்சுலின் செடியே போதும்!

Report
658Shares

சர்க்கரை நோய் என்றாலே 'அது பணக்காரர்களுக்கு வரும் நோய்' என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை. அதிலும் இந்தியாவில் ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளனர். எனவே இது குறித்து புதுசு புதுசா ஆராய்ச்சிகளும் புதுப் புது மருந்துகளும் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது கொண்டு வரப்பட்ட ஒன்று தான் இந்த இன்சுலின் செடி என்பது. இது ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு சர்க்கரை நோய் மட்டுமல்லாது சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும்.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் நீரிழிவு நோய்களின் தாக்கம் பெருமளவு அதிகரித்து உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்சுலின் செடி

இதனால் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது.' இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை' சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது.

இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.

பைட்டோ கெமிக்கல்கள்

ஹெக்டே ராவ் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வின் படி இந்த இன்சுலின் செடியில் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான டோகோபரோல், அஸ்கார்பிக் அமிலம், ஸ்டீராய்டுகள், β- கரோட்டின், டெர்பெனோயிட்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

மற்றொரு ஆய்வு

இது குறித்த மற்றொரு ஆய்வின் படி இந்த செடியின் சாற்றில் பைக்டோ கெமிக்கலான கார்போஹைரேட்ஸ், புரோட்டீன்ஸ், டிரைட்டர் ரெனாய்டுகள் அல்கலைடுகள், சபோனின்கள், டானின்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியுள்ளன.

இலையில் உள்ள சத்துக்கள்
 • 21.2% - நார்ச்சத்து
 • 5.2%-பெட்ரோலியம் ஈதர்
 • 1.33% - அசிடோன்
 • 1.06%-சைக்ளோஹெக்சன்
 • 2.95%-எத்தனால்
 • டெர்பெனாய்டு, லுபேல் கலவை
 • அதன் தண்டுப் பகுதியில் ஸ்டீராய்டு கலவை (ஸ்டிக்மாஸ்டரோல்)
 • ரைசோம் பொருட்களான (க்யுர்செடின் மற்றும் டயோசினீன்)

இதைத் தவிர தாதுக்களான பொட்டாசியம், கால்சியம், குரோமியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஜிங்க்

இன்சுலின் செடியின் பயன்கள்
 • சர்க்கரை நோய்க்கு தீர்வு
 • ஜீரண சக்தி
 • சிறுநீரக கோளாறு
 • கல்லீரல் பிரச்சினை
 • புற்றுநோய்க்கு தீர்வு
 • கொலஸ்ட்ராலை குறைக்கும்
 • தொண்டைப் புண் தீர்வு
 • ஆஸ்துமாவிற்கு தீர்வு
சாப்பிடும் அளவு

இந்த செடியை சாப்பிடும் அளவு ஒவ்வொருத்தர் உடல் நிலையை பொருத்து மாறுபடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை இதை சாப்பிடலாம். அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. காலையில் ஒரு வேளையும் இரவில் படுப்பதற்கு முன்பும் எடுத்து கொள்ளுங்கள். இலைச் சாறு அல்லது இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து கூட பருகி வரலாம்.

இன்சுலின் இலைச் சாறு தயாரிப்பது எப்படி
 • 10-15 இன்சுலின் இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.
 • அதை சிறியதாக நறுக்கி சூரிய ஒளியில் காய வையுங்கள்.
 • இலையை பிழிந்து பார்த்து நன்றாக காய்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும்.
 • நன்றாக காய்ந்த இலைகளை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.
 • 1 கப் தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
 • கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் இலைகளை போடவும்.
 • தண்ணீர் ப்ரவுன் நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.
 • இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
இன்சுலின் இலை டீ

தேவையான பொருட்கள்

 1. 5-7 இன்சுலின் இலைகள்
 2. 4 கப் தண்ணீர்
 3. தேன்

பயன்படுத்தும் முறை

 • இன்சுலின் இலைகளை கழுவி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
 • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
 • கொதிக்கின்ற தண்ணீரில் இலைகளை போடவும்.
 • தண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.
 • பிறகு வடிகட்டி ஒரு கப்பில் எடுத்து கொள்ளுங்கள்.
 • பிறகு சுவைக்கு தேனை சேர்க்கவும்.
பக்க விளைவுகள்
 • நல்லது இருக்கையில் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கும்.
 • ஆனால் இந்த இன்சுலின் செடியை பொருத்த வரை குறைந்த அளவே பக்க விளைவுகள் உள்ளன.
 • கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
 • இலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் கடினமான தன்மை எரிச்சலை உண்டு பண்ணக்கூடும்.

29079 total views