பூண்டில் இருந்து வரும் மிகவும் அடர்தியான நாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா? சாப்பிட்டால் அதிசயம் நடக்கும்!

Report
110Shares

பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் உணர்வோம். இந்த பூண்டில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்ஃபர் கலவைகள் இருக்கிறது.

பூண்டில் இருந்து வரும் மிகவும் அடர்தியான நாற்றத்திற்கு இதுவே காரணம்.

இதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் அல்சீனல் நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அதோடு இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது.

என்னென்ன இருக்கிறது?

உடலில் ஏற்படும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும்.

ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது பூண்டு.

இஞ்சி

பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து இந்த மருந்து தயாரிக்கலாம். இரண்டு இன்ச் அளவுள்ள இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இரண்டு அல்லது மூன்று பூண்டினை தோல் சீவிக் கொள்ளுங்கள்.

இவற்றை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

சுமார் ஐந்து நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் சூடு ஆறியதும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறையும், அரை ஸ்பூன் தேனையும் சேர்த்து பருகலாம்.

வெங்காயம்

சிறிதளவு வெங்காயத்தையும்,பூண்டையும் தனித்தனியாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தக் கலவையை அரை டம்பளர் தண்ணீரில் சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

இவை சளியினால் ஏற்படக்கூடிய பிறத்தொல்லைகளுக்கும் தீர்வளிக்கும்.

மஞ்சள் பூண்டு

தோல் நீக்கி பாதியாக நறுக்கிய பூண்டு ஆறு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,அரைஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் தேன்,ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஊறிய பூண்டினை எடுத்து அப்படியே சாப்பிடுங்கள்.

ஒரு முறை தயாரித்ததை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதாக இருந்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

பூண்டு சூப்

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள், அது பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய அரைகப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சைவ உணவு சாப்பிடுபவரக இருந்தால் இதனுடன் ஏதேனும் காய்கறியை சேர்க்கலாம். இதே அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் இத்துடன் சிக்கன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதில் சேர்த்திருக்கும் காய்கறி அல்லது சிக்கன் வெந்ததும் அதனை இறக்கி விடலாம்.

பூண்டு டீ

ஒரு கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள். அதில் பாதியாக நறுக்கிய ஐந்தாறு பூண்டினை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் அவை கொதித்ததும் இறக்கி விடலாம்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அசை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

4494 total views