தூக்கத்திலும் மாரடைப்பு வரும் எச்சரிக்கை? உணர்த்தும் ஆபத்தான 5 அறிகுறிகள்

Report
162Shares

மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாரடைப்பு எப்போது வருமென்று யாராலும் சரியாக கணித்து சொல்ல முடியாது.

ஆனால் சில அறிகுறிகள் மூலம் மாரடைப்பு ஏற்பட போவதை அறிந்துகொள்ளலாம். இந்த அறிகுறிகள் நாம் விழித்திருக்கும் போது நம்மை காப்பாற்ற உதவலாம். ஆனால் இரவில் நாம் தூங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

இருப்பினும் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போவதற்கான சில அறிகுறிகள் இருக்கிறது. அந்த அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

சீரற்ற இதயத்துடிப்பு

இரவு நேரத்தில் இதய துடிப்பு வேகமாகவோ அல்லது சீராக இல்லாமலோ இருப்பது மாரடைப்பு ஏற்பட போவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்கள் இதயத்துடிப்பு இதே நிலையில் தொடர்ந்தால் அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது இழப்புகளை தவிர்க்க உதவும். உடனடி சிகிச்சையாக தண்ணீர் குடிக்கலாம் அல்லது ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளலாம் இருப்பினும் இது தாற்காலிகமானதுதான் நிரந்தர தீர்வுக்கு மருத்துவமனை செல்வது அவசியம்.

வியர்வை

காலை எழுந்திருக்கும் போது உடல் அதிகமாய் வியர்த்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.

வியர்வை என்பது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று ஆனால் தேவையற்ற நேரத்தில் காரணமே இல்லாமல் வரும் வியர்வை நிச்சயம் ஆரோக்கியத்திற்கான அறிகுறி அல்ல.

அதற்காக இரவில் வியர்த்ததாலே பயம்கொள்ள தேவையில்லை, நீங்கள் அணிந்திருக்கும் உடை நனையும் அளவிற்கு வியர்த்தால் நிச்சயம் மருத்துவரை அணுகவேண்டும்.

தூக்கக்கோளாறு

இது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் பிரச்சினைதான். இதற்கு சோர்வு, பணிச்சுமை என பல காரணங்கள் இருந்தாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னரும் இந்த பிரச்சினை ஏற்படக்கூடும்.

எனவே காரணமின்றி தூக்கோளாறுகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும். மருத்துவரை அணுகாமல் தூக்க மாத்திரைகளை உபயோகிப்பது மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடும்.

மார்பு வலி

இது மிகவும் பொதுவான மற்றும் எளிதில் கண்டறியக் கூடிய அறிகுறிதான், ஆனால் அலட்சியமாக விட்டு விடக்கூடாத அறிகுறி. தூங்கும்போது ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல், மெல்லிய மார்பு வலி போன்றவை உங்களை தூக்கத்திலிருந்து உடனடியாக விழிப்படைய செய்யலாம்.

மெல்லிய மார்பு வலிதான் இருப்பதிலியே மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். வலி குறைவாக இருப்பதால் வேறு காரணத்தால் வலிக்கிறது என நீங்கள் அலட்சியமாக விட்டு விடலாம் ஆனால் அதன் விளைவோ மோசமானதாக இருக்கும்.

மருத்துவர்கள் இதுபோன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் மாரடைப்பை " அமைதியான மாரடைப்பு " என்று அழைக்கிறார்கள்.

உடல் வலி

சிலர் தூக்கத்தில் அசௌகரியம், தோள்பட்டை, கழுத்து, வயிறு போன்ற இடங்களில் வலி ஏற்படுவதால் தூக்கத்தில் இருந்து முழித்து விடுவார்கள்.

தோள்பட்டைதானே வலிக்கிறது என்று நினைக்கக்கூடாது நம் உடலின் அனைத்து பாகங்களும் இதயத்துடன் இணைதிருப்பதுதான்.

பரிந்துரைக்கப்பட்ட வலி என்றழைக்கப்டும் இந்த அறிகுறிகள் கடுமையான மாரடைப்பை ஏற்பட போவதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

மாரடைப்பை என்பது முன்கூட்டியே அறிய முடியாமல் போனாலும் இது போன்ற அறிகுறிகள் இருக்கமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சீரான இடைவெளிகளில் பரிசோதனை செய்து இதய ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளவும்.

5512 total views