பெண்களை அச்சுறுத்தும் கருப்பை பிரச்சனை!! குணமைடைய எளிய வீட்டு மருத்துவம் இதோ!!

Report
218Shares

தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

இதுவே குழந்தையின்மைக்கு காரணமாகவும் அமைகிறது. ஆகவே அதை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.மேலும் அதை எப்படி இயற்கை வைத்தியத்தில் சரி செய்வது என்பதை பார்க்கலாம்

வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.. வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையை பொடியாகி அதை தினமும் காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதை தூவி அதை குடிக்கலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.

கீரைகள் குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிட சோம்பேறித்தனம் பட வேண்டாம். குறிப்பாக பசலை, முருங்கை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மகப்பேறுக்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

8275 total views