கணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா?... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்!.....

Report
3609Shares
தோற்றத்திற்கு முக்கியத்துவம்

தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் கணவர் திடீரென அழகான உடைகளில் தோன்றினால் எச்சரிக்கை அவசியம். தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் ஆவலாக இருக்கக் கூடும். மீசை அல்லது தாடியை ட்ரிம் செய்யலாம் இதுவரை அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திராத நிலையில்நீண்ட நேரம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அதிக உணர்ச்சி வசப்படுவது

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம்.

குணநலத்தில் மாற்றம்

நீங்கள் ஆடை உடுத்தும் விதம், பேசும் விதம், உங்கள் எடை அதிகரிப்பு அல்லது வடிவ மாற்றங்கள் என எதெற்கெடுத்தாலும் உங்களை விமர்சனம் செய்யக் கூடும். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும் , குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம். உங்களை விட்டுவிட்டு புதிய உறவை நோக்கி செல்லும் எல்லா அஸ்திரங்களையும் அவர் உங்கள் மேல் பயன்படுத்தலாம்.

ரகசியமான மனிதராக மாறலாம்

அலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்தில் சென்று பேசுவது ஒரு தவறு இல்லை. ஆனால் எல்லா அழைப்பிற்கும் இதே முறையை பின்பற்றினால் அது சந்தேகத்தை உருவாக்கும். அல்லது நீங்கள் அருகில் இருந்தால், அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தாலும் அதனை எடுக்காமல் அப்படியே விடலாம்.

கணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். மெதுவாக பேசினால் அல்லது சிரித்தால், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நோட்டம் விட்டால் அவரை சந்தேகிக்கலாம்.

தொடர்பு கொள்வது

உங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

மிகவும் பாசமாக மாறுவார்

திடீரென்று உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு மழை பொழியத் தொடங்குவார். அவர் உங்களை ஏமாற்றுவதால் உண்டாகும் குற்ற உணர்ச்சியைக் குறைக்க இப்படி நடந்து கொள்வார். இது அன்பான கணவன் செய்யும் செயல் தான். இருந்தாலும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் புலனாய்வு செய்து அதனை கண்டுபிடிக்கலாம்.

உள்மனம்

ஒரு பெண்ணாக, மனைவியாக உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் உள் மனம் தெரிவிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சரியானவையாக இருக்கக்கூடும். நீங்கள் பொறாமைக் குணம் இல்லாதவராக, எதையும் தவறாக நினைக்கக்கூடியவராக இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் உள்மனம் சொல்லும் உங்கள் கணவரின் மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை கவனிக்கத் தவற வேண்டாம்.

பாலியல் தொடர்பு

கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய காலங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.

ஒரே பெயரை திரும்ப திரும்ப அழைப்பது

உங்கள் கணவர், அவருடைய உரையாடல்களில் அடிக்கடி ஒரே பெயரை திரும்ப திரும்ப சேர்த்துப் பேசலாம். இதன்மூலம் அவருக்கு அந்த பெயரில் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிய வரும். ஆரம்பத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு பெயரை, நீங்கள் கவனிக்கத் தொடங்கியவுடன் மெதுவாக மென்று முழுங்கத் தொடங்குவார்.

loading...