உங்கள் கனவில் தண்ணீர் அடிக்கடி வருகிறதா? உங்களை நோக்கி என்ன ஆபத்து வரப்போகிறது தெரியுமா?..

Report
352Shares

கனவுகள் அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். ஏனெனில் நமது ஆழ்மனது ஆசைகள் பலவற்றை நமக்கு வரும் கனவுகள் பிரதிபலிக்கும். சிலசமயம் கனவுகள் நமது எதிர்காலத்தையும் கூட முன்கூட்டியே செல்லும். ஆனால் அவ்வாறு அதனை கூறும்போது நாம் சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கனவில் வரும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனை புரிந்து கொண்டால் அதிர்ஷ்டத்தையும் பெறலாம், ஆபத்தையும் தடுக்கலாம். இந்த பதிவில் உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் அதன் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம்.

நீரைப் பற்றிய கனவு

தண்ணீரை பற்றிய கனவுகள் பொதுவாக மனித உணர்வுகளுடன் தொடர்புடையவை ஆகும். நீரை கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத ஒன்றாகும். ஒருபுறம் பார்த்தால் நீரின்றி வாழ்வது என்பது எந்த உயிரினத்தாலும் முடியாத ஒன்று, மறுபுறம் பேரழிவிற்கு காரணமாக இருப்பதும் நீர்தான். கனவில் நீர் வருவது உங்கள் தனிப்பட்ட வாழக்கையை எப்படி பாதிக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நீர் மற்றும் வெள்ளம் கனவில் வருவது

கனவில் வெள்ளம் வருவது ஒருபோதும் நல்லதின் அறிகுறியாக இருக்காது, இது உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். கனவில் வெள்ளம் வருவது உங்கள் பாலியல் ஆசைகளின் வெளிப்பாடாகும். உங்கள் கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் பதட்டமும், பிரச்சினைகளும் ஏற்பட போவதன் அறிகுறி ஆகும். அதுவே வெள்ளம் குறைவது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களும், சிந்தனைகளும் வரப்போகிறது என்று அர்த்தம்.

தண்ணீர் நிரம்பி வழியும் கனவு

உங்கள் கனவில் தண்ணீர் நிரம்பி வழிவது போல பார்த்திருக்கிறீர்களா? தண்ணீர் மிதமான வேகத்தில் பாய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும், அதுவே அதிவேகமாக நிரம்பி வழிவது போல கனவு வந்தால் அது நீங்கள் உங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறி ஆகும். எதிர்மறையான நீர் வழிவது உங்கள் கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் கட்டுப்பாட்டை இழக்க போகிறீர்கள் என்பதற்கான அர்த்தம் ஆகும்.

தண்ணீர் உயர்வது போன்ற கனவு

தண்ணீர் எந்த வடிவத்தையும் எடுத்துக்கொள்ளும் தன்மையுடையது. அதுபோலத்தான் தண்ணீர் பற்றிய கனவும் அது நேர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும், எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். நீர் உயர்வது போன்ற கனவு உங்கள் வாழ்க்கையில் தற்போது நீங்கள் அனுபவிக்கும் பெரும் உணர்வுகளை குறிப்பதாகும்.

வீட்டிற்குள் தண்ணீர் இருப்பது போன்ற கனவு

வீட்டிற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல கனவு வருவது பெரிய அளவில் உணர்ச்சிகள் வெளிப்படுவான் அறிகுறியாகும். இது உங்கள் வீட்டை பற்றியோ அல்லது உங்கள் குழந்தை பருவத்தை பற்றியோ நீங்கள் மறந்துவிட்ட உணர்ச்சியின் அடையாளமாக இருக்கலாம். உங்கள் வீட்டிற்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருப்பதன் அறிகுறிதான் வீட்டிற்குள் தண்ணீர் வருவது போன்ற கனவு காண்பதாகும்.

பிரச்சினைகள்

இந்த கனவு நீங்கள் முறிந்த உறவுடனேயோ அல்லது விவாகரத்து பெற்றோ தனியாக வாழும்போதோ வர வாய்ப்புள்ளது. இந்த கனவு உணர்த்துவது என்னவெனில் நீங்கள் விரைவில் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும். மற்றொரு புறம் இந்த கனவின் நல்ல அர்த்தம் என்னவெனில் வரும் ஆண்டிற்குள் உங்கள் வீட்டில் குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாகும்.

அலைகள் மற்றும் நீர் பற்றிய கனவு

உங்கள் கனவில் அலைகளும், கடலும் வந்தால் அது ஆழமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். நீரின் அமைதியானது உங்கள் சமநிலையான மனதை குறிக்கும், அதுவே பெரிய அலைகள் இருக்கும் கடல் உங்களின் பயம் மற்றும் பதட்டத்தால் உங்கள் வாழ்வில் ஏற்படபோகும் அச்சங்களை குறிக்கும். சுனாமி அளவிற்கு பேரலைகள் வந்தால் உங்களை நோக்கி துயரமான செய்தி ஒன்று வரப்போகிறது என்று அர்த்தம்.

16070 total views