எடையைக் குறைக்க ஓடிய மனைவி... சான்ஸை சாதகமாக்கி பழிக்கு பழி வாங்கும் கணவன்...

Report
376Shares

மனைவியின் எடையை குறைக்க கணவர் செய்யும் வழிமுறைகள் குறித்து புகைப்பட தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

உடல் எடை கூடுவது என்பது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயமாகிவிட்டது. அதுவும் சம்பந்தப்பட்ட நபரை காட்டிலும் அவரை சுற்றியிருப்பவர்களுக்குதான் அதுகுறித்து கவலை அதிகமாகிவிட்டது.

கல்யாணத்துக்கு முன்னர் குண்டாக உள்ள பெண்கள் தங்கள் எடையை குறைக்க எவ்வளவோ ரிஸ்க் எடுத்து குறைத்துவிடுகின்றனர். ஆனால் இவர்கள் கல்யாணத்துக்கு பின்னர் அதுவும் குழந்தை பிறந்தவுடன் தங்கள் உடல்நலனில் அக்கறை இல்லாமல் குண்டாகிவிடுகின்றனர்.

கணவர்மார்களுக்கு எரிச்சல்

ஒல்லியாக உள்ள கணவருக்கு மனைவி குண்டாகி வருவது கண் உறுத்திக் கொண்டே இருக்கும். இதற்காக அவர்களை கிண்டல், கேலி செய்து அவர்களின் உடலை குறைக்க தூண்டிவிடுவது ஒரு ரகம். இருந்தாலும் சிலர் இதற்கும் அசராமல் இருப்பர்.

மற்றொன்று என்ன?

மற்றொரு ரகம். பெண்கள் தாங்களாகவே முன் வந்து உடல் எடையை குறைக்க யோகா, உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு கட்டுப்பாடு என இருப்பர். இவற்றில் யோகா, உடற்பயிற்சிக்கு செலவு செய்ய வேண்டும். அதை காட்டிலும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

நடைபயிற்சி

நடைபயிற்சி நல்லது என்றாலும் தற்போது தனியாக பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் இருந்து தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு போவதால் இதை பெரும்பாலான பெண்கள் தனித்து செய்வதில்லை. கணவர் துணையுடனோ அல்லது அந்த தெருவில் வசிக்கும் 4 அல்லது 5 பெண்களுடனோ சேர்ந்தோ நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு செய்தால் பொருள்கள் வீணாகி விடும். பெண்களின் வயிறே மிச்சம் மீதியை சாப்பிடும் குப்பைத் தொட்டிதானே. கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீணாகிவிடக் கூடாதே என்பதற்காக உணவை வீணாக்கமாட்டார்கள் நம் மனைவிமார்கள்.

சரியான சாய்ஸ் இதுதான்

அப்ப மனைவியின் உடல் எடையை குறைக்க பெஸ்ட் சாய்ஸ் இதுதான், படத்தில் கணவர் கார் டிக்கியின் பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கொடுக்கும் பணத்தை பெற்று கொள்வதற்காக மனைவி ஓடி வருகிறார். காசுக்கு காசும் ஆச்சு, உடல் எடையும் குறையும் என்பது பெண்களின் மைண்ட் வாய்ஸ். காசு போனாலும் பரவாயில்லை. சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கும் மனைவியை இப்படியாயினும் பழிவாங்க வேண்டும் என்பது கணவரின் சாய்ஸ். எதுவாக இருந்தா என்னங்க... ஒரே கல்லில் இரு மாங்காய் என்பதை போல் கணவர், மனைவி இருவரின் எண்ணமும் ஈடேறுகிறதே.

16048 total views