உடலில் இருக்கும் மச்சங்களும் பொருளாதாரம் மற்றும் குண ரகசியங்களும்..

Report
440Shares

மச்சம் என்பது உடற்கூறு சார்ந்தது. சிலருக்கு குடும்ப மச்சம் எல்லாம் இருக்கும். தாத்தா, அப்பா, மகன் என ஒரே மாதிரியான மச்சங்கள் அவர்களது உடலில் தொடர்ந்து இருக்கும்.

சிலருக்கு அதிகமாக இருக்கும், சிலருக்கு மச்சமே இருக்காது. கைரேகை, நாடி பார்ப்பது போல ஒருவரது மச்சத்தை வைத்தும் பொது பலன் கூறுகிறார்கள்.

அதிலும் குறிப்பிட்டு ஒருவரது மச்சத்தை வைத்து அவரது பொது குணம் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்தும் அறியலாமாம்.

இதை பற்றி போதிய குறிப்புகள் இல்லை எனிலும். இதுபற்றி மருத்துவர் ஐயன் ஸ்டீவன்சன் என்பவர் மச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதை பற்றி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

கால்கள்

கால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் இயற்கையாகவே திறமை மிகுந்து இருப்பார்கள். ஆனால், அதை எப்படி சீர்ப்படுத்துவது, வழிமுறைப்படுத்தி வெற்றி காண்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுவார்கள்.

இடது தோள்ப்பட்டை

இடது தோள்ப்பட்டையில் மச்சம் இருந்தால் பொருளாதார தடங்கல்கள் உண்டாகுமாம். அதுவே வலது பக்கம் இருந்தால் நல்ல அதிர்ஷ்டம் என கூறப்படுகிறது.

நெஞ்சுக்கு கீழ்

நெஞ்சு / மார்புக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் கை வைக்கும் இடமெல்லாம் பொன்னாகும். அதாவது வெற்றி காண்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம் இருக்கும்.

மார்பின் நடுவே

மார்பின் நடுவே மச்சம் இருந்தால் அவர்களுக்கு மூதாதையர் மூலம் அதிக செல்வம் கிடைக்கும்.

வலதுபுற இடுப்பு

வலது புற இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

வலது தோள்ப்பட்டை

வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பார்கள். குடும்பத்திற்கு அதிகம் உழைப்பார்கள். ஒழுக்கம் நிறைந்து காணப்படுவார்கள்.

கை / விரல்கள்

கைகள் அல்லது விரல்களில் மச்சம் இருந்தால் அவர்கள் சுதந்திர பறவையாக திகழ்வார்கள். யாரின் உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

வயிறு

வயிற்றில் மச்சம் இருந்தால் இயற்கையாகவே ஆசை கொஞ்சம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் சுயநலத்துடனும் செயற்படுவர். முக்கியமாக காதல், விருப்பம் என்று வரும் போது.

மூக்கு

மூக்கில் மச்சம் இருந்தால் மிகவும் கிரியேட்டிவாக இருப்பார்கள். கலைநயம் அதிகமாக இருக்கும்.

தாடை

தாடை பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு போவார்கள். முக்கியமாக வாழ்க்கை முறை சீராக இருக்காது.

இடது கன்னம்

இடதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்களது பொருளாதார நிலை சற்று மோசமாக இருக்கும். எளிதாக மனசோர்வு அடைவார்கள். அதுவே வலதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

பாதம்

பாதத்தில் மச்சம் இருப்பவர்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி என கூறலாம். பிறந்த இடத்தை விட அதிகம் பிற இடங்களில் தான் வாழ்வார்கள்.

உதட்டிற்கு கீழ்

உதட்டிற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்களிடம் அதிகம் கோபம் இருக்கும். எளிதாக கோபப்படுவார்கள். இதன் காரணமாக இவர்களை எளிதாக ஏமாற்றிவிடுவார்கள்.

17615 total views