நீங்கள் காணும் இந்த கனவுகள் மரணத்தின் எச்சரிக்கை... என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Report
677Shares

கனவுகள் என்பது அனைவருக்கும் பிடித்த அதேசமயம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. கனவுகளில் பெரும்பாலும் நாம் மனதில் இருக்கும் ஆசைகள்தான் வரும் என்று பரவலான ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. சிலசமயம் கனவுகள் உங்களுக்கு வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.

உண்மைதான் கனவுகளை புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே நமது எதிர்காலத்தை கணிக்க முடியும். கனவுலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கும் நேரத்தில் உங்கள் கனவுகள் உங்களுக்கு தெளிவை தரக்கூடும். கனவுகள் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லும் தகவலில் முக்கியமானது மரணம் பற்றியது. சில கனவுகள் உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ மரணம் நேரப்போவதை முன்கூட்டியே உணர்த்தும். அந்த கனவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இராமாயணம்

வாலமீகி எழுதிய இராமாயணத்திலும் கனவுகள் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கக்கூடும் என்ற குறிப்புகள் உள்ளது. வால்மீகியின் இராமாயணத்தில் தசரதரர் இறப்பதற்கு முந்தைய நாள் தன் பரதன் அவன் கனவில் தன் தந்தை கருப்பு உடையணிந்து மற்றொரு கருப்பு உடையணிந்த பெண்ணுடன் எண்ணெயை குடிப்பது போலவும் கழுத்தில் சிவப்பு நிற மாலையணிந்து, நெற்றியில் குங்கும திலகமிட்டு எமதர்மனை நோக்கி நடப்பது போல கனவு கண்டான்.

மரண அறிகுறிகள்

மரண அறிகுறிகள் இரண்டு வகைப்படும் தூரத்து அறிகுறிகள் மற்றும் நெருங்கிய அறிகுறிகள். தூரத்து அறிகுறிகள் என்பது நமக்கு எந்தவித ஆரோக்கிய பிரச்சினைகள் இல்லாதபோதும் ஏற்படக்கூடியவை. அவை உடல் அறிகுறிகள், மன அறிகுறிகள் மற்றும் கனவு அறிகுறிகள். கனவு அறிகுறிகள் என்னும்போது நம்மை நிர்வாணமாக பார்ப்பது, மலையிலிருந்து விழுவது, பாலைவனத்தில் பயணம் செய்வது போன்றவை மரணத்தின் அறிகுறிகள். மேலும் சில கனவுகள் மரணத்தை குறிக்கும்.

கருப்பு

கருப்பு என்பது மயக்கம், மர்மம், ஆபத்து, இருள், துக்கம், நிராகரிப்பு, வெறுப்பு என பலவற்றை குறிக்கும். உங்கள் கனவில் இந்த வண்ணம் வருவது உங்களை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள உங்களை ஆழ்நிலைக்கு வரவேற்பதன் அர்த்தம் ஆகும். மேலும் இது உங்கள் வாழ்வில் அன்பு இல்லாததை குறிக்கும்.

பாம்பு

கனவில் பாம்பு வருவதன் அர்த்தத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளது. சில கலாச்சாரங்களில் கனவில் பாம்பு வருவது அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் நிஜவாழ்க்கையில் பாம்பு என்பது அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் பொதுவாக கனவில் பாம்பூ வருவது அபசகுனத்தை குறிக்கும்.

கருப்பு பூனை

பழங்காலம் முதலே கருப்பு பூனை என்பது தீயசக்திகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகளுடன் தொடர்புடையதாக கருகப்பட்டு வருகிறது. கனவில் கருப்பு பூனை வருவது பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் பயத்தின் வெளிப்பாடாகும். அவர்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டு ஆபத்தில் சிக்க போகிறார்கள் என்பதன் அர்த்தம்தான் கனவில் கருப்பு பூனை வருவது.

பற்கள் விழுவது

சில கலாச்சாரங்களில் கனவில் பற்கள் விழுவது பல காண்பது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இறக்க போகிறார்கள் என்பதை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. அதேபோல தூங்குவதற்கு முன் கடுமையான பல் வலி இருப்பது மோசமான கனவுகளை தூண்டும்.

கருப்பு பறவை

இது " இறப்புக்கான எச்சரிக்கை " என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அண்டகாக்கையோ அல்லது கருப்பு சிறகுள்ள வேறு எதாவது பறவையோ படுக்கைக்கு அருகில் இருப்பது போல கனவு வந்தால் அது மரணத்திற்கான இறுதி எச்சரிக்கையாகும்.

மூழ்கும் மனிதனை காப்பாற்றுவது

மூழ்கும் மனிதனை காப்பாற்றுவது துர்சகுனமாக கருதப்படுகிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுவது யாரோ உங்களை பழிவாங்க காத்திருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. எனவே இதுபோன்ற கனவுகள் வந்தால் காப்பாற்றுபவர் இறக்க போகிறார் என்று அர்த்தம்.

பாடல் மற்றும் நடனம்

ஒருவர் கனவில் மகிழ்ச்சியாக ஆடுவது போலவோ அல்லது பாடுவது போலவோ வந்தால் அவர் கொலைசெய்யப்படப் போகிறார் என்று அர்த்தம். அதேபோல ஒருவர் தன் உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது போலவோ அல்லது கழுதை மீது பயணம் செய்வது போலவோ கனவு கண்டால் அவர் இறக்க போகிறார் என்ரூ அர்த்தம்.

தனியாக குடிப்பது

ஒருவர் தான் மலை மீதோ அல்லது சுடுகாட்டிலோ அமர்ந்து தனியாக குடித்தால் அவர் தீய ஆத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோல காவல் கடவுளின் படம் உடைக்கப்படுவது போல பார்த்தால் அதற்கு மேல் அவர்களை காப்பாற்ற முடியாது என்று அர்த்தம்.

பயணம் செய்வது

உங்கள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் நீண்ட பயணம் செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் கனவில் நீங்கள் பயணம் செய்வது போலவோ அல்லது பயணத்திற்கு தயாராவது போலவோ பார்த்தால் நீங்கள் ஏதேனும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளிப்போடவும். ஏனெனில் அந்த பயணம் உங்கள் இறுதிப்பயணமாக அமைய வாய்ப்புள்ளது.

25966 total views