வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்திடுங்க

Report
1373Shares

கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகம், கை, கால்களை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு குறைந்தது 30 நொடிகள் கழுவுவது அவசியம், விரல் இடுக்குகள், நகங்கள் என சுத்தமான முறையில் கைகளை கழுவ வேண்டும்.

சோப்பு இல்லாத பட்சத்தில், ஆல்கஹால் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம். ஆனால் சானிடைசர்களை பயன்படுத்திய பிறகு, அடுப்பின் அருகில் நிற்பதையோ, சிகரெட் லைட்டர்கள் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

நீங்கள் அணிருந்திருந்த கண்ணாடி, வாட்ச் உட்பட மற்ற பொருட்களையும் சானிடைசர் கொண்டு துடைப்பது அவசியம்.

வெளியில் சென்று வந்தபின்னர் அணிந்திருந்த உடைகளை கிருமி நாசினி ஊற்றப்பட்ட தண்ணீரில் ஊறவைத்து நன்றாக துவைக்கவும்.

துவைக்காமல் மீண்டும் ஒருமுறை அணிவதை தவிர்க்கவும், அதுமட்டுமின்றி மற்ற துணிகளுடனும் வைக்கக்கூடாது.

loading...