மட்டக்களப்பு மச்சான்... பிரபல இயக்குனருடன் காதல் வாழ்க்கை குறித்து நடிகை மௌனிகா

Report
983Shares

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு திருமணமாகி அகிலா என்ற மனைவி இருக்கையில் நடிகை மௌனிகாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவரின் விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி நடிகை மௌனிகாவை மணந்தார். இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இறந்துபோது அவரது உடலை பார்க்க மௌனிகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதம் செய்தனர்.

போராட்டத்திற்கு பிறகு, மௌனிகாவுக்கு, பாலு மகேந்திராவின் உடலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பங்குபோட்டவர் என்ற குற்றச்சாட்டு மௌனிகா மீது சுமத்தப்பட்டது. இதனால் பல்வேறு மன வேதனைகளுக்கு ஆளான மௌனிகா தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பாலுமகேந்திரா குறித்து மனம் திறந்துள்ளார். நான் இன்னொரு பெண்ணின் புருஷனை பங்கு போட்டது தவறானஒ ஒன்றுதான். ஆனால் அந்த வாழ்க்கையை நான் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சரியாக வாழ்ந்தேன்.

இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பரஸ்பரமாக வாழ்ந்தோம்.

நான் பாலுமகேந்திராவுடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகிய காலம். அவரை நான், திமிங்கலம், மட்டக்களப்பு மச்சான், மிஸ்டர் மகேந்திரா என செல்லமாக அழைப்பேன். அவர் கடைசியாக என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கினார்.

ஒன்று, நான் இறந்தபிறகு நீ படங்களில் நடிக்கலாம், உனக்கு பிடித்தமான இயக்குநர்களுடன் வேண்டுமானால் பணியாற்று, ஆனால் நடிக்காமல் இருக்காதே. நீ மிகவும் திறமையான நடிகை என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதம் தெரிவித்து சத்தியம் செய்துகொடுத்தேன். இரண்டாவது, நீ ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு, உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று கூறினார்.

ஆனால், இதற்கு நான் சத்தியம் செய்து கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் இருந்த இடத்தில் வேறாரு நபரை வைத்துப்பார்க்க எனது மனம் இடம்கொடுக்கவில்ல. நடக்காத ஒன்றுக்கு எதற்காக சத்தியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதற்காக, நான் சத்தியம் செய்துகொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

37529 total views
loading...