நீங்கள் இடது கை பழக்கம் உடையவர்களா?.. உங்களுக்காக சுவாரஷ்ய தகவல் இதோ..!

Report
210Shares

1976-ம் ஆண்டு முதக் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • இடது பக்க மூளையைக் காட்டிலும் வலது பக்க மூளையின் செயல்பாடு அதிகமாக இருப்பதால்தான் இடதுகை பழக்கம் ஏற்படுகிறது. இடதுகை பழக்கம் உடையவர்கள் பெரும்பாலும் தனித்தன்மையுடன் காணப்படுவர்.
  • உங்கள் பெயரை நீங்கள் வலது கையில் எழுதத்தான் அதிக வாய்ப்புள்ளது. அதற்குக் காரணம், உலக அளவில் சுமார் 10 சதவிகிதம் பேரே இடது கை பழக்கம் உடையவர்கள்.
  • அவர்கள் தங்களது இடது கையிலேயே எழுதுவது, பந்து எறிவது, மற்ற காரியங்களைச் செய்வதில் வசதியாக உணர்வார்கள். ஆனால் பெரும்பாலனவர்கள் அவர்களின் வலது கையில்தான் பிராதன வேலைகளைச் செய்ய தேர்ந்தெடுப்பார்கள்.
  • ஒரு சிலரோ தங்களது இரு கைகளையும் ஒரே மாதிரி பயன்படுத்தும் திறனையும் கொண்டிருப்பார்கள். அப்படி பல்வேறு வேலைகளுக்கு இரண்டு கைகளையும் பயன்படுத்துவது ‘மிக்ஸுடு ஹேண்டுனஸ்' என்று கூறப்படுகிறது.
  • சில ஆய்வுகள் சொல்லும் தகவல்படி, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடது கை பழக்கம் உடையவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்களாம். 1860 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் வெறும் 2 சதவிகிதம் பேர்தான் இடது கை பழக்கம் உடையவர்களாக இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. 1920-களில் அது 4 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்ததாம்.
  • இன்றைய சூழலில் 10 சதவிகத இடது கை பழக்கம் உடையவர்கள் இருக்கிறார்கள் எனப்படுகிறது. இதற்குக் காரணம், பழங்காலங்களில் வலது கையைப் பயன்படுத்திதான் பல்வேறு காரியங்களைச் செய்ய மக்கள் பணிக்கப்பட்டார்களாம். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இடது கை பழக்கம் உடையவர்கள், அவர்களின் இயல்பில் செயல்பட முடிகிறதாம்.
  • ஆனால், ஏன் சிலர் பிறவியிலிருந்தே இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்? சில அடிப்படை பிறப்புக் கூறுகளில் மாற்றம், பிறந்தபோது இருக்கும் எடை, குறைப் பிரசவம், கர்ப்ப காலங்களில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் ஒரு நபர் இடது கை பழக்கமுடையவர்களாக மாறுவதற்குக் காரணமாக அமைகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதே நேரத்தில், இடது கை பழக்கத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து ஸ்திரமான பதில் ஏதும் இல்லை.
  • ஆனபோதும், பெண்களைவிட ஆண்களே அதிகமாக இடது கை பழக்கம் இருப்பவர்களாக இருப்பார்களாம். இடது கை பழக்கம் உடையவர்களை மருத்துவ மொழியில் ‘sinistrality' என்றழைக்கப்படுகிறார்கள். sinistrality-களை கொண்டாடுவோம்.

5478 total views