இந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

Report
2117Shares

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 24ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக!

மேஷம்!

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கடந்த சில தினங்களாக இருந்து வந்த பொருளாதார சிக்கல் தீரும். எப்போதும் சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்ற முடியும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் வாழலாம். கடனை அடைக்க பணம் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வந்து பிறகு சீராகும். பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர் வழியிலும் பிரச்னைகள் ஏற்பட்டு அகலும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் பல புதுமைகளை புகுத்த முடியும்.

ரிஷபம்!

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, பேச்சு திறமையால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். எதை செய்ய நினைத்தாலும் மன நிறையுடன் செய்யவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. பல ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். முன்யோசனையுடன் நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும். யாரிடத்திலும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் சீக்கிரத்தில் புரியவரும்.

மிதுனம்!

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் ஒரு சில சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் அதை திறமையாக சமாளிப்பீர்கள். பண சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பயணங்கள் நிறைய உண்டு. மன ரீதியான பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அதுவே தானாக சரியாகிவிடும். உடன்பிறப்பால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.

புது வீடு மாற்றம் மற்றும் புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். நண்பர்களால் நிறைய நன்மைகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையில் பனிப்போர் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

கடகம்!

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, பண புழக்கத்தில் தடை வரலாம், இருப்பினும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. எதை செய்தாலும் குடும்ப பெரியோர்களை கலந்து ஆலோசித்து செய்தால் பிரச்சனைகள் ஏற்படாது. வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். கடன் பிரச்சனை உங்கள் கட்டுக்குள் வரும். கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர்.

பயணங்களால் அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

சிம்மம்!

சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். வீட்டில் ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் எப்போதும் நிதானம் தேவை. உடன் பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீக விஷயங்களுக்காக நிறைய பணம் செலவு செய்ய வேண்டி வரும். குடும்ப முன்னேற்றம் திருப்தியாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வகையில் ஏற்றமும், இரக்கமும் இருக்கும்.

கன்னி!

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடக்கும். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். உடன்பிறப்பு வகையில் மனக்கவலை ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண விஷயத்தில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம்.

உடல் நலம் சீராகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வகையில் ஆதரவு பெருகும். மனதில் உள்ள எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். பூர்விக சொத்து விஷயத்தில் சாதகமான தீர்ப்பு வரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

துலாம்!

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, வருங்காலம் நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெரும். யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவர். வெளியூரிலிந்து வரும் செய்திகள் தங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். மனதில் பட்டதை தயக்கமின்றி தெரியமாக செய்வீர்கள். குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மையை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

விருச்சிகம்!

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, உங்கள் எண்ணங்கள் மற்றும் ஆசைகள் பூர்த்தியாகும் மனதில் புதிய உற்சாகம் பிறகும். நெருக்கமானவர்களிடம் எப்போதும் அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும்.

முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்த்து வரவும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். உடல் நிலை சீராக இருக்கும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் முழு கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு!

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களுக்கு உதவுவதாக சொல்லி தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு சிலர்க்கு வீடு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அது நாளடைவில் சீராகும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும்.

மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க யோகா தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒரு காரியத்தை தொடங்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. குடும்ப நபர்களிடம் அனுசரித்து போகவும். பழைய வேலையிலிருந்து புது வேலைக்கு மாற வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

மகரம்!

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது செயல்கள் அனைத்தும் வேகமும், விவேகமும் வேகமாக இருக்கும். எதிர்பாராத சில வம்பு சண்டைகள் வரும். சில நேரங்களில் கோர்ட்டு வழக்குகளை சந்திக்க நேரிடும். அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். பண விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். யாருக்காகவும் உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர மாட்டீர்கள்.

எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்காமல் போகலாம். கணவன் மனைவிடையே இருந்த ஈகோ பிரச்சனை தீரும். பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தோடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்யோக வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் வரும்.

கும்பம்!

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களும் எதிர்பாராத விஷயங்களும் நடக்கக்கூடும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை தனியாளாக நின்று செய்து முடிப்பீர்கள். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடைய நல்லுறவு ஏற்படும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பிறர் பாராட்டும் செயல்களை செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்கள் வகையில் ஒரு சில தொந்தரவு வரலாம். குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

மீனம்!

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள வழி கிடைக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படும். பேச்சில் எப்போதும் நிதானமும் செயலில் பொறுமையும் இருப்பது நல்லது. சொந்த பந்தகளுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த மந்த நிலை மாறும். சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் நல்ல பலம் உண்டு.

உறவினர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. உங்கள் நன்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும். குடும்ப முன்னேற்றம் கூடும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். பணம் பற்றாக்குறை முற்றிலும் தீரும். உத்யோகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் சீராகும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவாகும்.

54286 total views