தமிழகத்தில் 449 பேருக்கு கொரோனா பாதிப்பு- 6 பேர் பலி.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

Report
0Shares

கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால் ஆண்மை பறிப்போவதோடு.. இத்தனை உறுப்புகளை பாதிக்குமாம்- ஆய்வில் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் ஆனது இன்று வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸுற்கான தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கபடவில்லை..

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 151 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4, 091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 461 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது.