74 முதியவரிடம் பேசிக்கொண்டிருந்த சிறுமி... சிறிதுநேரத்தில் கதறிய கொடுமை

Report
0Shares

கேரளாவில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த போதகரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் போதகராகிய மேத்யூ(74). மேத்யூவை அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம், அப்போது தம்பதியின் மைனர் பெண்ணும் அவர்களுடன் செல்வார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி போதகர் வீட்டில் இருந்து அழுதுகொண்டே வந்தார். இது பற்றி பெற்றோர் கேட்டபோது, போதகர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தனர். பெரும்பாவூர் டி.ஒய்.எஸ்.பி. ஜெயராஜ், குன்னத்துநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பினுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபி ஜார்ஜ் ஆகியோர் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் மைனர் சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போதகர் மேத்யூவை கைது செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

loading...