நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள்: இறப்பதற்கு முன்னர் கடைசியாக போட்ட பதிவு என்ன தெரியுமா?

Report
0Shares

சித்தூரில் தனது சொந்த மகள்களையே பெற்றோர் அடித்துக்கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் மூத்த மகள் அலேக்யா (27) மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி இருந்துள்ளனர். சாய் திவ்யா, அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பூஜைகள் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர்.

ஆனால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.

மேலும், சாய் திவ்யா, அலேக்யா என்னும் இரு சகோதரிகளின் இன்ஸ்கிராம் பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருக்கும் “Work is done" "Shiva is Coming" போன்ற வாசகங்கள், குடும்பத்தின் அதீத நம்பிக்கைகள், கற்பனைகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமியர்களையும் குறித்த சர்ச்சையான கருத்தும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

loading...