வீட்டருகில் விளையாடிய சிறுவர்கள் குளத்தில் சடலமாக கிடந்த கொடுமை... நடந்தது என்ன?

Report
0Shares

கடலூர் அருகே சகோதரிகள் இருவரின் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த திருப்பெயர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் மல்லிகா தம்பதியின் மகன் விவேகன்.

மல்லிகாவின் சகோதரி மணிமேகலை தனது இரட்டையர்களான விக்னேஷ், சர்வேஷ் என்ற மகன்களை அழைத்து தங்கை வீட்டிற்கு வந்துள்ளார்.

வந்த இடத்தில் மூன்று பேரும் வீட்டருகில் வளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளனர். பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் இறுதியில் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிசார் இதுகுறித்து விசாரித்த போது, மூன்று பேரின் கால்தடம் குளத்துக்கரையில் நடந்து சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரவோடு இரவாக தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையின் போது, நள்ளிரவில் 12 மணியளவில் விக்னேஷ் மற்றும் சர்வேஷ் இவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விவேகனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனை அடுத்து இன்று காலை 7 மணியளவில் பேரிடர் மீட்பு குழுவினர் குளத்தில் இறங்கி படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது விவேகனின் உடலும் குளத்தில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூன்று சிறுவர்களின் உடல்களையும் பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

loading...