ஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்! அக்கம்பத்தினர் பகீர் தகவல்

Report
0Shares

பெற்ற மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு. இவரது மனைவி பத்மஜா.

புருஷோத்தம் அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்களுக்கு அலேக்யா (27) மற்றும் சாயி திவ்யா (22) என்ற இரண்டு மகள்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது இரண்டு மகள்களையும் ஆடையில்லாமல் நிற்கவைத்து அடித்து கொலை செய்து நரபலி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பத்மஜாவுக்கு வலிப்புநோய் இருந்ததாகவும், மகள்களை நரபலி கொடுத்து பூஜை செய்தால் வலிப்புநோய் குணமாகும் எனவும், இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும், பூஜையின் பலனாக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் எனவும் கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியதால் இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு புருஷோத்தம் தனது நண்பர் ராஜூ என்பவரை போனில் தொடர்புகொண்டு, தனது மனைவி தனது இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு பதறிப்போய் வீட்டிற்கு சென்ற அவரை வீட்டிற்குள் விடாததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிசார் வந்து பார்க்கையில் இரண்டு பெண்களும் தனித்தனி அறையில் கொலை செய்யப்பட்டு சிகப்பு துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே இந்த தம்பதியினர் மிகவும் உக்கிரமாக இருப்பார்கள் எனவும், அவர்கள் வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

அதேபோல் கொலை செய்யப்படுவதற்கு சில நாள் முன்பு சாய் திவ்யா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்னர், அலெக்கியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சிவா வருகிறார்... வொர்க் இஸ் டன்" என்று சந்தேகத்துக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார் எனவும் பொலிசார் கூறுகின்றனர்.

loading...