மகள்களை ஆடையில்லாமல் நிற்கவைத்து பெற்றோர்கள் அரங்கேற்றிய கொடூரம்... ஆசிரியர் செய்த காரியமா இது?

Report
0Shares

பெற்ற மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு. இவரது மனைவி பத்மஜா.

புருஷோத்தம் அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்களுக்கு அலேக்யா (27) மற்றும் சாயி திவ்யா (22) என்ற இரண்டு மகள்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புருஷோத்தம் மற்றும் அவரது மனைவி பத்மஜா இருவரும் வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது மகள்கள் இருவரையும் ஆடையில்லாமல் நிற்க வைத்து அடித்து கொலை செய்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்து சிசிடிவி கமெராவை ஆய்வு செய்து பார்த்ததில், அதில் மகள்களை இவ்வாறு சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில், அற்புதங்கள் நிகழும் எனவும், ஒருநாள் இரவு மட்டும் காத்திருங்கள், எங்கள் மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் எனவும் தம்பதியினர் பொலிசாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஆனாலும் அவர்களை கைது செய்த போலீசார் இந்த பூஜைக்கான காரணம் என்ன? மகள்களை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நல்ல படித்து, நல்ல வேலையில் இருக்கும் தம்பதியினரே தங்கள் மகள்களை அடித்து கொலை செய்து நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.