சத்தமில்லாமல் காணப்பட்ட பொலிசாரின் வீடு... அவதானித்த அக்கம்பக்கத்தினருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
இந்தியாவில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கிலி மாவட்டம் பேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் அன்னாசோ காவனே (65). இவர் புனேயில் பொலிசாராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.
இவரது மனைவி மலன் (50), மகன் முகேஷ் என குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், நேற்றைய தினம் வீட்டிலிருந்து யாரும் வெளியில் நடமாடாமல் இருந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகலறிந்த பொலிசார், 3 பேரின் சடலத்தினைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் மகன் முகேஷ் பங்குசந்தையில் செய்த முதலீடு பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதனால் மனமுடைந்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் அவர்களின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.